நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்,
கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று நாம் நீண்டநேரம் கலந்துரையாடினோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளோம்.
அவ்வாறு நிபந்தனைகளுககு உட்பட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியினக் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நான் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடவுள்ளேன்.
எனவே எதிர்வரும் ஜனாதிபித தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தொிவித்தாா்.