Breaking News

கோட் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியான அப்டேட்!

 


நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலுக்கான அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.

படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக் குறித்து படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் மற்றும் கதாநாயகி ஆடுவது போலான நிழற் படமே இடம் பெற்றுள்ளது. இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்திற்கான அடுத்த அப்டேட்டை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.