சிங்கராஜ வனம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில், 35,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில், அதிகளவான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வன பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, வர்த்தமானி மூலம் வெளியிடப்படாத 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் காடுகளை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுமாறு வனப் பாதுகாப்புத் துறைக்கு அரசு கணக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.