Breaking News

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

 


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறப்போகும் வேட்பாளர் தொடர்பான புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது.

இவ்விடயம் தொடா்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 4 இடச்சத்திற்கும் இற்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் வைத்திருக்கும் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் போன்ற அனைத்து உண்மைகளையும் ஆய்வு செய்த பின்னரே, வேட்பாளரை தேர்வு செய்வதற்கு சில குழுவினர் தயாராகி வருவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களின் எழுச்சி காரணமாக தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் புதிய அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளின் ஆதரவும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே செப்டம்பர் மாதம் 21ம் திகதி தேசிய மக்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஓய்வுபெற்ற முப்படையினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.