அரியநேத்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவை . சேனாதிராஜா தெரிவிப்பு !
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள அரியநேத்திரன் தொடர்பாக, எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவென்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சி இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.