இளம் வயது மாரடைப்பு : தவிர்ப்பது எப்படி?
அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.
இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைப்பிடித்தல் பழக்கம், மது அருந்துவது போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.
யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.