Breaking News

மற்றவர்கள் நினைப்பதை பற்றி கண்டு கொள்ளாதீர்கள்- சுசித்ராவுக்கு திரிஷா பதிலடி ?

 


தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

அப்போது, நடிகை திரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில், " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்தார். இந்த பதிவு திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, ஜெயலலிதாவோடு த்ரிஷாவை ஒப்பிட்டு சுசித்ரா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், த்ரிஷாவின் இந்த பதிவு சுசித்ராவுக்கான பதிலடியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.