Breaking News

தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் திடீா் அறிவிப்பு!

 


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனாதிபதி ஆக இருந்ததே தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் நலன் கருதி ஜனாதிபதியாக எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தான் நம்புகிறேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை கடந்த ஜூன் மாத இறுதியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளா் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான விவாதத்திற்குப் பின்னா், அவர் ஜனநாயகக் கட்சியினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.