Breaking News

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

 


செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளை வழங்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்

இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

இதேவேளை பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் நேற்று இணக்கம் காணப்பட்டதால், அது தொடர்பான வர்த்தமானியை நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியும் எனவும், வழக்கு விசாரணை முடிந்த பின்னர் அடுத்த வாரத்திற்குள் அந்த நியமனங்களை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் தற்போது 6000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 23 பேர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் மீதியுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் மிகக் குறுகிய காலத்தில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.