Breaking News

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சரவையின் அறிவிப்பு!

 


ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.