ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்ற தொழிலதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்த்து மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன..
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே மற்றும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
மேலும் இந்த மனுவை விசாரணை செய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.