Breaking News

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

 


ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசாங்க ஊடகப் பணிப்பாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு  அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 14 திகதி தொடக்கம் முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது