அனைத்துப் பாடசாலைகளும் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் – கல்வி அமைச்சர்!
அனைத்துப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அறிவைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவைப் புகட்டுவதற்கான திறன்களைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்
அத்துடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பிள்ளைகளின் நலனுக்காக மாறுவதற்கு தயாராக இருங்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும் மாறிவரும் உலகம் மற்றும் கல்வி முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாமல் சுற்றுச்சூழலையோ உலகையோ மாற்றுவது நியாயமற்ற செயல்கள் என்றும், இதனைச் சில ஆண்டுகளுக்கு மேல் தொடர முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.