முகத்தில் கருப்பு சாயத்துடன் விஜய் ஆண்டனி டிரைலர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு!
ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.
படத்தின் டிரைலர் லான்ச் ஈவண்ட் தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் திரை பிரபலங்கள் அவர்களது பட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக புதுப்புது கெட்டப்பில் வருவார்கள்.
ஆனால் இம்முறை விஜய் ஆண்டனி யாரும் வராத ஒரு புதிய கெட்டப்பில் வந்துள்ளார். ஒரு பக்க முகம் மற்றும் கைகளில் கருப்பு சாயம் பூசியது போன்ற தோற்றம். அதற்கு காரணம் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கிள் இருந்து அப்படியே வந்ததால் இப்படி இருக்கிறது என்று கூறினார்.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.