உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் தீர்ப்பு ஒத்திவைப்பு!
கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது
இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இடம்பெற்ற போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் மனுக்கள் தொடர்பான வாய்மொழி விரிவுரைகள் வழங்கல் இன்று நிறைவு பெற்றது.
இந்த மனுக்களை ஐக்கிய மக்கள் சக்தி ,மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பாஃப்ரல் அமைப்பு ஆகியவை சமர்ப்பித்திருந்தன
அதன்படி கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.