Breaking News

சின்ன சின்ன கண்கள்.. பவதாரணி குரலில்.. ப்ரோமோ ரிலீஸ் செய்த G.O.A.T படக்குழு!

 


நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைதொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சின்ன சின்ன கண்கள் பாடலின் குட்டி ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " எங்கள் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் நாளை முதல் உங்கள் மனதில். பெரிய மனதுடன் இந்த பாடலின் சின்ன ப்ரோமோ இதோ.." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பவதாரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இதன்மூலம், கோட் படத்தில், விஜய் குரலில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோட் படம் செப்டம்பர் 5 ஆம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

டைம் டிராவல் தொடர்பான கதையம்சம் கொண்ட கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.