திருமண புகைப்படங்களை பகிர்ந்த அர்ஜுன் மகள்!
'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.
இந்நிலையில், நேற்று, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனையடுத்து திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.