Breaking News

குவைத்தில் பயங்கர தீ விபத்து- 40 இந்தியர்கள் உயிரிழப்பு!

 


குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

கட்டத்தில் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.