Breaking News

100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்!

 


இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.

பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.

அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.