தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து அரசியல் கட்சித் தலைவராக பரிணமித்துள்ள நடிகர் விஜய் இன்று [ஜூன் 22] தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் 68 வது படமான GOAT படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபுவும், நடிகரும் மக்கள் நீதி மைய்யத் தலைவர் கமல் ஹாசனும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வளைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்து செய்தியில், எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு மிகவும் மேஜிக்கலாக அமைந்தது. வாய்ப்புக்கும் கோட் பட செட்டில் உங்களுடன் ஏற்பட்ட நியாபங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்து செய்தியில், 'என் அன்பு விஜய் சாருக்கு வாழ்த்துகள், இந்த வருடமும் உங்களுக்கு சிறந்ததாக அமையும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் சார். லவ் யூ' என வாழ்த்து தெரிவித்துளளார். விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதவிர GOAT பட கதாநாயகி மீனாட்சி சவுத்திரி, நடிகை லைலா ஆகோயோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செயப்பட்டன. மேலும் GOAT படத்ததின் கிளிம்ஸ் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு GOAT படத்தில் இடமபெற்றுள்ள சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.