Breaking News

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிவிப்பு!

 


2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணைய விண்ணப்ப செயல்முறை 2024 ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, விண்ணப்பங்களை கோருவதற்கான கடைசி நாள் 05 ஜூலை 2024 என தெரிவித்துள்ளார்.