அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாளர்கள், புலம்பெயர் அமைப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் அவர் நாடு திரும்பவுள்ளார்.