பாகுபலி 3 விரைவில் உருவாகும் - ராஜமவுலி!
2015 -ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் 'பாகுபலி' படம் வெளியானது. இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கினார். இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.
இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். 3-டி தொழில் நுட்பத்தில் ரூ.250 கோடியில் இப்படம் உருவானது. இந்திய திரைப் படங்களில் பாகுபலி' படத்தின் 2 பாகங்களும் உலக அளவில் சுமார் ரூ. 2000 கோடி வசூல் பெற்றது.
இப்படம் தமிழ் ,இந்தி, மலையாளம் மொழிகளிலும் 'டப்பிங்' செய்யப்பட்டு ஒரேநேரத்தில் திரையிடப்பட்டது. மேலும் அதைத்தொடர்ந்து வெளியான 'பாகுபலி 2 ' படம் வசூல் சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படம் 'டப்பிங்'செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை குவித்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3 - ம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது 'பாகுபலி' படத்தின் 3 - ம் பாகத்தை இயக்க இருப்பதை இயக்குனர் ராஜமவுலி. உறுதி செய்துள்ளார்
இதுகுறித்து ஐதராபாத்தில் இயக்குநர் ராஜமவுலி கூறியதாவது :- "பாகுபலியை உருவாக்கிய நகரம் என்பதால், ஐதராபாத் எனது இதயத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு.பாகுபலி 3' பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.