Breaking News

மின்சக்தி அமைச்சிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

 


நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க மின்சக்தி அமைச்சு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக காசல்ட்ரீ, மவுசாக்கலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, சமனலவெல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் நீர்மின் உற்பத்தி நூற்றுக்கு 31 வீதமாக அதிகரித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்கட்டணத்தினை குறைக்குமாறு 2 தடவைகள் மின்சக்தி அமைச்சிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. மின்சக்தி அமைச்சும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணைந்து ஒரு தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன்நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். மேலும், மின் அலகொன்றிற்கு அறவிடப்படும் கட்டணத்தினை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைக்கின்றேன்“ இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.