Breaking News

சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!

 


மெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூக ஊடக வலையமைப்புகளில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள சட்டங்களை குறித்த

வலையமைப்புக்கள் மீறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளிடம் பல்வேறு போதை பழக்கங்கள்

ஊக்குவிக்கப்படுவதாகவும் அது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே குறித்த சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதில் பயனர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும்போது வயதை சரிபார்க்கும் முறையிலும் ஐரோப்பிய யூனியன் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த வலையமைப்புக்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்டால், Meta நிறுவனத்துக்கு அதன் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.