கோட் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார்?
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் மோகன் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நேற்று விஜய் அமேரிக்கா சென்றார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கவுரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த் , வெங்கட் பிரபு மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நடிக்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.