33 வருடங்களுக்கு பிறகு படப்பிடிப்பில் இணைந்த ரஜினி - அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்`!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று வேட்டையன் படப்பிடிபிற்காக ரஜினி மும்பை சென்றார். அவர் விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்கலில் வைரலாகியது. படத்தின் இன்ட்ரோ பாடலில் அனிருத் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. படத்தின் இண்ட்ரோ பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் அனிருத்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது அமிதாப் பச்சனுடன் இணைந்து வேட்டையன் படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியும், சிரித்து கொண்டு கருப்பு நிற கோட் சூட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர்.
33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகது.