சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?
அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.
இதையடுத்து சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத நிலையில் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.