Breaking News

STAR படக்குழுவினரை பாராட்டிய STR!

 


'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற நடிகர் சிம்பு நேற்று அவரது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ஸ்டார் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படம் தனது கனவுகளை துரத்திக் கொண்டு இருக்கும் அனைவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டார். சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டு இருக்கும் தக் லஃப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.