Breaking News

வெப்பத்தின் உச்சம் :காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி..!

 


ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.

சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வெட்ட வெளியில் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசியை உள்ளே வைத்து விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.