Breaking News

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக சர்வஜனவாக்கெடுப்பு – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு!

 


ஈழத்தமிழர்களின் தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பு மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வு அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்றது.

தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர்.

அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15ஆவது வருடத்தினை நினைவேந்தி வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.