விடுதலை 2 படத்தில் கேமியோ பண்ணும் பிரபல நடிகர்!
கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. விடுதலை பாகம் 1 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.
விடுதலை பாகம் 2 சில காட்சிகள் படமாக்க பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளது. விஜய் சேதுபதி பல்வேறு படங்கள் பல்வேறு மொழியில் நடித்து வருவதால் அவரால் 20 நாட்கள் கால் ஷீட் கொடுக்க இயலவில்லை. அதனால் படப்பிடிப்புகள் தாமதம் ஆகின்றன என தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் படத்தை குறித்து மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளார். இது குறித்து விடுதலை 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகிய புகைப்படம் அதை உறுதி படுத்தியுள்ளது. எஸ்.ஜே சூர்யா எம்மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.