Breaking News

வைத்தியர்கள் பற்றாக்குறையால் திண்டாடும் இலங்கை!

 


நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கருத்துத் தெரிவிக்கையில்” நாட்டில் 1,390 வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியை நிறைவு செய்த போதிலும், அவர்களுக்கான நியமனங்கள்  8 மாதங்களாக வழங்கப்படவில்லை.

அத்தோடு, ஆறு வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை. நாடு முழுவதும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற போதும் புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படாதமை அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

இதனால், நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு  நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளது. இந்த விடயத்திற்கு உரிய தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்” இவ்வாறு ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.