தற்பெருமை வேண்டாம்: இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்தாரா ஏ.ஆர்.ரகுமான்?
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வளவு பெரிய சூரியனை கையில் இருக்கும் குடை காத்து நிழல் கொடுக்கும். அது போல நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது" என்று மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், இளையராஜாவை ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் பேச்சை, கங்கை அமரன் கண்டித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.