நடிகர் விஜயின் கோட் படத்தின் புது அப்டேட்!
பிரபல நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.புதுச்சேரி, கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள், அதிக 'லைக்', பார்வைகள் சாதனை படைத்தது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந் திகதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந் திகதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.