எந்தவித மோசடியும் நான் செய்யவில்லை – மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும் வெளிப்படுத்துங்கள் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து கொள்ள முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.