அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு!
அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளை (08) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், நாளை 08 ஆம் திகதி முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது. 107 பில்லியன் ரூபா. அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது."
நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும். இது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது என்றார்.