Breaking News

ஜப்பானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி கடலில் விழுந்தது- ஒருவர் பலி!

 


ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர்.

டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து கிடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் தண்ணீரில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.