ஷங்கர் மகள் 2 -வது திருமணம் : நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!
பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.
இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்
இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.