இந்தியன் - 2 : ரிலீஸ் எப்போது ?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் - 2' படத்தை இயக்க தொடங்கினார்.
இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது 'இந்தியன்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எனவே விரைவில் இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடிந்ததும் இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.