மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் டாடா படத்தில் நாயகியாக நடித்தார். கவின் ஜோடியாக இவர் நடித்த டாடா படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தீபக் பரம்போல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார்.