கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவுகள் ஏற்படும்!
கோவிஷீல்டு தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்த சூழலில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.