இலங்கையில் ரி20 உலகக்கிண்ணத் தொடர்!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.
போட்டியை நடத்தும் நாடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது.
எனவே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
2026 ரி20 உலக்கிண்ணத் தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில்,
போட்டித் தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.