Breaking News

பால் மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

 


எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இதேவேளை ,புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.