முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது
சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணி இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது
இதற்கமைய காங்கேசன்துறை தெற்கு பகுதியில் 235 கிராம சேவகர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும்.வறுத்தலைவிளானில் 241 கிராம சேவகர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது
மேலும் மயிலிட்டி தெற்கில் 240 கிராமசேவகர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது
இதேவேளை விடுவிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது