Breaking News

தமிழ் பேசும் மக்களுக்கான பொலிஸாரின் விசேட அறிவிப்பு!


தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில்  பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.