அஷோக் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!
அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமான நபர். 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தெகிடி படம் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதற்கு பிறகு ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில், போன்ற படங்களில் நடித்தார். போர் தொழில் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து நல்ல படங்களை தேடி தேர்வு செய்து நடிப்பதால் மக்களிடையே நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் அசோக் செல்வன். பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது.
புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். 'எமக்கு தொழில் ரொமேன்ஸ்' என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.
அவந்திகா இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலாஜி கேசவன் படத்தை இயக்கவுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.