கேரளா ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட Swag- ஆன செல்ஃபி!
கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் 4 நாட்கள் படப்பிடிப்புக்காக 9 வருடங்களுக்கு பிறகு கேரளா சென்றார்.
கேரளாவில் அவர் இறங்கியதில் இருந்து ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்த் வண்ணம் உள்ளனர்.
கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விஜய் ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார்.
கேரள ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாசலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் மணிக்கணக்காக இரவு பகல் பாராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ரசிகரின் குழந்தையை விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ வைரலானது, மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலாகியது.
இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார். கிளம்பும் முன் கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். அவர் ரசிகர்களுடன் பேசும் பொழுது தமிழ்நாடும் கேரளாவும் என் இரு கண்கள் மாதிரி என குறிப்பிட்டுள்ளார். பின் கேரள ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி என வணங்கி கூறினார்.
பின் அவர் ரசிகர்களை சந்திக்கும் பொழுது போது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.