விஜய் யின் மகன் சினிமா இயக்குனராக அறிமுகம் - புது அப்டேட்!
பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார்.சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.
இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார்.
மேலும் அதுபோல விஜய் மகனுக்கும்லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.
இந்தப்படம் 'கிரிக்கெட்' மையமாக கொண்ட கதையாகும். அது தொடர்பான 'ஸ்க்ரிப்ட்' உருவாக்கும் பணியில் சஞ்சய் தற்போது தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.