Breaking News

இனிமேல் நடிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

 


பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்தின் 171- படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், 'இனிமேல்' ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்து உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கி உள்ளார்.

இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசன் மிக நெருக்கமாக இணைந்து நடித்து உள்ளார். காதலர்கள் இருவரும் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்க செல்கின்றனர். அத்திரைப்படத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைகிறது. பாடல் இறுதியில் கமல் ஹாசனின் அவருக்கே உரித்தான பேஸ் குரலில் பாடியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் இசையில் கமல்ஹாசனின் வரிகள் கேட்பதற்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. திரைக்கு பின்னே பார்த்து பழகிய லோகேஷ் கனகராஜ் முகம் இனிமேல் ஆல்பம் பாடலில் நடித்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இனிமேல் பாடலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.